Menu

புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

புதுச்சேரி வழுதாவூர் சாலையில், சாலையோர ஆக்கிரமிப்புகள் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டதுடன், வணிக உரிமம் இன்றி இயங்கிய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 

உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட வழுதாவூர் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்ததுடன், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதற்கு இடையூறு ஏற்பட்டது.

 

புதியதாக பொறுப்பேற்ற ஆணையர் கந்தசாமி அதிரடி நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார். நேற்று மூன்றாவது முறையாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

 

கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து துவங்கி, கதிர்காமம் மருத்துவக்கல்லுாரி வரையில் சாலையோரம் இருந்து ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் விளம்பர போர்டுகள், போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

நகராட்சி செயற்பொறியாளர் குணகேகரன். சுகாதார அதிகாரி சுரேஷ், பொதுப்பணித்துறை பொறியாளர் ஸ்ரீதரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

மேலும், நுாற்றுக்கும் மேற்பட்ட வியாபார நிறுவனங்களில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உரிமம் இல்லாமல் இயங்கிய கடைகளுக்கு, ரூ. 100 முதல் ரூ. ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

 

சுகாதாரம் இல்லாமல் குப்பைகளை கொட்டி வைத்திருந்ததாக 30க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 

Facebook Comments

Leave a Reply